22nd of August 2013
சென்னை::குளுகுளு நாட்கள் என்ற படத்தில் 4 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இது பற்றி இயக்குனர் காதர் ஹசன் கூறியது: அமெரிக்க கலாசாரத்தில் படித்த ஒரு மாணவி, இந்திய கலாசாரத்தில் வளர்ந்த ஒரு மாணவி உள்ளிட்ட 4 தோழிகள் ஒரே பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார்கள்.
மேல்படிப்புக்காக கோஎஜுகேஷன்கூடிய இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்கின்றனர். மேலைநாட்டு கலாசாரத்தில் மூழ்கும் மாணவ, மாணவிகள் டேட்டிங்கில் ஈடுபடுகின்றனர். இதன் விளைவு என்னவாகிறது என்பதே கதை. ஹீரோவாக புதுமுகங்கள் ஸ்ரீஜித் விஜய், ஹரிஸ், அர்ஜுன், சாபி, ஹீரோயின்களாக மாளவிகா, ரைசா, சுபிக்ஷா, ஆஷா நடிக்கின்றனர். உல்பல் ஒளிப்பதிவு செய்கிறார்.
வி.பிரபாகரன் வசனம் எழுதுகிறார். பர்ஹன் ரோஷன் இசை அமைக்கிறார். இதன் ஷூட்டிங் சென்னை, கேரளாவில் நடந்துள்ளது
Comments
Post a Comment