4 நாளில் 100 கோடி – ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ சாதனை!!!

12th of August 2013
சென்னை::ஷாரூக்கான், தீபிகா படுகோனே, சத்யராஜ் மற்றும் பலர் நடித்து ரோஹித் ஷெட்டி இயக்கிய ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ – ஹிந்தித் திரைப்படம் கடந்த 9ம் தேதி வெள்ளியன்று வெளியானது.
 
வெளியான நான்கு நாட்களிலேயே இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலித்து, பாக்ஸ் ஆபிஸ் சாதனை புரிந்துள்ளது.
இதற்கு முன், சல்மான் கான் நடித்து வெளியான ‘ஏக்தா டைகர்’ படம் ஐந்து நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்த சாதனையை ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படம் முறியடித்துள்ளது.
 
அது மட்டுமல்ல, இன்னும் சில சாதனைகளையும் இந்த படம் புரிந்துள்ளது.
படம் வெளியான முதல் நாளே 33 கோடி ரூபாய் வசூல் செய்தது ஒரு சாதனை. இரண்டாம் நாளில் 28 கோடி ரூபாய் வசூலித்தது மற்றொரு சாதனை.
 
இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் எந்த படத்திற்கும் இதுவரை கிடைக்காத வரவேற்பு இந்த படத்திற்கு மிகப் பெரிய அளவில் கிடைத்து வசூலை வாரியுள்ளது.
 
முதன் முதலாக பாக்ஸ் ஆபீஸில் 200 கோடி ரூபாய் வசூலிக்கும் படமாக இந்த படம் உருவாக வாய்ப்புள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Comments