29th of August 2013
சென்னை::சமீபத்தில்,30 வயதை எட்டிய த்ரிஷா,இந்த ஆண்டோடு,நடிப்புக்கு குட்பை சொல்லி விட்டு,இல்லற பந்தத்தில் இணை ந்து விடுவார் என்று, அவ்வப்போது செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.ஆனால், அவரோ, திருமணம் பற்றி, இன்னமும் நான் யோசிக்கவே இல்லை.சினிமாவில் நடிக்கஆரம்பித்து,12 ஆண்டுகள் ஆகிவிட்டன. 30 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன்.
இதில்,பெரும்பாலானவை, கமர்சியல் படங்கள் தான். அனைத்து ஹீரோக்களுக்கும் பொருந்தக் கூடிய, நடிகையாக நடித்து வந்தேன்.சமீபகாலமாக, ரம் உட்பட இரண்டு படங்களில், டைட்டில் கதாபாத்திரத்தில் நடிக் கிறேன்.அதனால், எனக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. பெண்களின்உரிமைக்காக குரல் கொடுக்கும் புரட்சிகர மான கதைகளில் நடிக்கவும் என்னை தயார்படுத்தி வருகிறேன்என்கிறார், த்ரிஷா.இவருக்கு, பாலிவுட் செல்லும் ஆசை யெல்லாம் இல்லையாம். முழுநேர தமிழ் நடிகையாக நீடிக்கவே விரும்புகிறாராம்.
Comments
Post a Comment