26th of August 2013
சென்னை::முனி 3 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகை அஞ்சலி நடிக்கவுள்ளாராம். முனி, காஞ்சனா படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ராகவா லாரன்ஸ், இதன் மூன்றாம் பாகமான 'கங்கா' படத்தை உருவாக்கி வருகிறார்.
இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகிறது. இதில் லாரன்ஸ் ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார். தெலுங்கு தயாரிப்பாளர் சுரேஷ் என்பவர் தயாரிக்கிறார். முதல் இரண்டு பாகங்களிலும் கோவை சரளாவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. இதனையடுத்து அவர் மூன்றாவது பாகத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் முனி 3 படத்தில் மேலும் ஒரு நடிகை இணைந்துள்ளார். ஆமாங்க, நடிகை அஞ்சலி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இதன்மூலம் அவர் தெலுங்கில் தனது மார்க்கெட்டை உயர்த்த முடிவு செய்துள்ளாராம்.
Comments
Post a Comment