28th of August 2013
சென்னை::கமலின் ‘விஸ்வரூபம் முதல்பாகம் சிறுபான்மையிருக்கு எதிராக கருத்து சொல்லப்பட்டதாக எதிர்ப்பு கிளம்பியது. சில காட்சிகள் நீக்கப்பட்டு பிறகு ரிலீஸ் ஆனது. தற்போது ‘விஸ்வரூபம்‘ 2ம் பாகம் இயக்கி வருகிறார் கமல். இப்பட ஹீரோயின் பூஜா குமார் கூறியதாவது.
விஸ்வரூபம் 2வில் எந்த முரண்பட்ட கருத்தும் சொல்லப்படவில்லை. முதல்பாகத்தில் கூட முரண்பட்ட கருத்துக்கள் எதுவும் இல்லை. நாம் சுதந்திர நாட்டில் வாழ்கிறோம். கருத்து சொல்ல எல்லாருக்கும் உரிமை உள்ளது. கமலுக்கும் அந்த உரிமை உள்ளது. அவர் ஒரு படைப்பாளி. படங்கள் மூலம் தனது கருத்தை சொல்கிறார். இதில் தவறு இல்லை. தவறான கருத்து என்றால் அதை நீக்குவதற்கு சென்சார் குழுவினர் இருக்கின்றனர். அவர்கள் பார்த்து, இப்படத்தை மக்கள் பார்க்க திரையிடலாம் என்று அங்கீகாரம் கொடுத்த பிறகுதான் படங்கள் வெளியாகிறது.
மக்களின் உணர்வுகள் உள்ளிட்ட எல்லா அம்சங்களையும் ஆராய்வதில் சென்சார் குழுவினர் அனுபவம் வாய்ந்தவர்கள். இப்படி இருக்கும்போது மற்றொருவர் இதுபற்றி கேள்வி கேட்பதில் நியாமல் இல்லை. விஸ்வரூபம் பிரச்னையின்போது மக்கள் எங்கள் பக்கம் நின்றார்கள். எல்லோரையும் சந்தோஷப்படுத்த வேண்டும் என்பது இயலாத காரியம். விஸ்வரூபம் 2 பாகத்தில் எந்த சர்ச்சையும் இல்லை.
Comments
Post a Comment