11th of August 2013
சென்னை::தேசிங்கு ராஜா”படம் இம்மாதம் (ஆகஸ்ட் ) 23 ஆம் தேதி 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.
விமல் கதாநாயகனாக நடித்து அதிக திரையரங்குகளில் வெளியாகும் முதல் படம் ‘தேசிங்கு ராஜா’தான் என்று எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் மதன் , இயக்குனர் எழில் கூறினார்கள்.
தொடர்ந்து காமெடி படங்களில் நடித்து வரும் விமல் இந்த படத்திலும் காமெடியில் கலக்கியிருக்கிறாராம். கூடவே சூரி உட்பட பல நடிகர்களும் காமெடியில் கூட்டு சேர்ந்து கலக்கி இருக்கிறார்கள்.
இயக்குனர் எழில் இதற்கு முன் இயக்கிய ‘மனம் கொத்திப் பறவை’ படமும் காமெடி கலந்த காதல் படமாக அமைந்து வெற்றி பெற்றது.
Comments
Post a Comment