தன்னை ஒரு புதுமுகம் போல நடத்தியதால் அர்ஜீனின் ‘ஜெய்ஹிந்த் – 2′ வில் நடிக்க மறுத்து விட்டாராம் பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி.!!!
21st of August 2013
சென்னை::தன்னை ஒரு புதுமுகம் போல நடத்தியதால் அர்ஜீனின் ‘ஜெய்ஹிந்த் – 2′ வில் நடிக்க மறுத்து விட்டாராம் பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி.
நடிகர் அர்ஜூன் டைரக்ட் செய்து ஹீரோவாக நடித்து 1994 ஆம் ரிலீஸான படம் தான் ஜெய்ஹிந்த். பக்கா ஆக்ஷன் படமான இந்தப்படம் அர்ஜூனுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப்படம் வெற்றிப் பெற்றதில் படத்தில் இடம்பெற்ற கவுண்டமணி-செந்தில் காமெடி காட்சிகளுக்கும் முக்கிய பங்கு உண்டு.
முதல் பாகம் ஹிட்டானால் அதைப் பின்பற்றி அந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் படமாக எடுப்பது சமீபகாலமாக தமிழ்சினிமாவில் அதிகரித்து வருகிறது. அதேபோல முதல் பாகத்தில் நடித்தவர்களை சென்டிமெண்ட்டாக இரண்டாம் பாகத்திலும் நடிக்க வைப்பது வழக்கம். அப்படித்தான் ஜெய்ஹிந்த் 2-விலும் கவுண்டமணி-செந்தில் காமெடி இருக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.
ஆனால் இந்தப்படத்தை ஆரம்பித்த போது “காமெடிக்கு கவுண்டமணிக்கு பதிலாக தெலுங்கு நடிகர் பிரம்மானந்தம் என்பவரை போட்டிருப்பதாக சொன்னார் அர்ஜுன். கூடவே “ ரசிகர்களுக்கு காமெடியில் ஒரு மாறுதல் இருக்கட்டுமே..?” என்பதற்காகத்தான் அ
வரை கமிட் செய்தேன் என்றும் கூறியிருந்தார்.
ஆனால் நடந்தது வேறாம்.
ஜெய்ஹிந்த் -2 படத்தை ஆரம்பிக்கப் போவதாக சொன்னவுடன் அர்ஜுனுக்கு வாழ்த்துக்கள் சொல்லியிருக்கிறார் கவுண்டமணி. பிறகு “சார் நீங்களும் இந்தப்படத்துல இருக்கீங்க… என்னோட ஆபீஸுக்கு வந்தீங்கன்னா மேற்படி கால்ஷீட், சம்பள சமாச்சாரங்கள் எல்லாத்தையும் பேசி முடிச்சிடலாம்” என்று கவுண்டமணியை போனில் கூப்பிட்டிருக்கிறார் அர்ஜூன்.
இதனால் கடுப்பான கவுண்டமணி “இல்ல அர்ஜூன் உங்களை தேடி வந்து படங்கள்ல நடிக்கிற அளவுக்கு நான் ஒன்னும் புதுமுகம் இல்ல. வேணும்னா நீங்க என்னோட ஆபீஸுக்கு வாங்க பேசலாம்” என்று கூப்பிட்டாராம்.
ஆனால் அர்ஜூன் போகவேயில்லை. கவுண்டமணியும் அர்ஜூன் ஆபீஸூக்கு போகவில்லை.
விஷயம் இப்படி இருக்க, அர்ஜூனோ “காமெடியில் ஒரு மாறுதல் வேணும்கிறதுலனால தான் பிரம்மானந்தத்தை போட்டிருக்கிறேன்” என்று பார்க்கிற மீடியாக்களிடமெல்லாம் பொய் சொல்லி வருகிறாராம்.
இதை கேள்விப்பட்ட கவுண்டமணி ‘அட பொய் சொன்னாலும் கொஞ்சம் அளந்து சொல்லக்கூடாதா..?’ என்று அர்ஜூன் மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம்.
அதானே.. கவுண்டமணின்னா சும்மாவா…?
Comments
Post a Comment