17 மொழிகளில் வெளியாகும் ‘ஐ’!!!

15th of August 2013
சென்னை::‘ஐ’ திரைப்படத்தை 17 மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
 
கோலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியிருக்கும் படங்களில் ஒன்று ஐ. விக்ரம்-ஷங்கர் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் படம்தான் இது. ஏற்கெனவே இவர்கள் கூட்டணியில் அந்தியன் படம் வெளியானது. ஐ படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார்.
 
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
கிட்டதட்ட 75 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தற்போது படத்தின் கிளைமேக்ஸ் காட்சி சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் ஐ படத்தை 17 மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இதற்குமுன் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ’எந்திரன்’ படம் 9 மொழிகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments