27th of August 2013
சென்னை::ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் ஆர்யா- நயன்தாரா ஜோடியாக நடிக்கும் படம் ராஜா ராணி. இப்படத்தை பிரபல இயக்குனர் சங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லீ இயக்கியிருக்கிறார்.
ஆர்யா- நயன்தாராவுடன் சத்யராஜ், ஜெய், நஸ்ரின் நசீம், சந்தானம் ஆகியோரும் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தபடம் தொடங்கிய நாளில் இருந்தே படத்திற்கு அதிகப்படியான விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
கடந்த 4 நாட்களுக்கு முன் சென்னையில் இப்படத்தில் டிரைலர் வெளியிடப்பட்டது. 'யூ டியூப்' இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நான்கு நாட்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ராஜா ராணி டிரைலரை பார்த்து மகிழ்ந்துள்ளனர்.
குறைந்த நாட்களில் ஒரு டிரைலரை இத்தனை பேர் பார்த்திருப்பது தமிழ் சினிமாவில் இதுவே முதல்முறை என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Comments
Post a Comment