29th of August 2013
சென்னை::அசினுக்கு ரூ.1 கோடி சம்பளம் தரவேண்டும் என்று அவரது தந்தை கறாராக பேசியதால் அவருக்கு நடிக்க வந்த வாய்ப்பு ஸ்ருதிக்கு கைமாறியது.இந்தி படங்களில் ஆமிர்கான், சல்மான்கான் என பிரபல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த அசின் இரண்டாம் கட்ட ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தபோது ஏற்க மறுத்தார்.
தற்போது அவரது பாலிவுட் மார்க்கெட் இறக்கம் கண்டிருக்கிறது. அபிஷேக் பச்சனுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இந்நிலையில் அசின் நடித்த ‘ரெடிÕ என்ற படத்தை இயக்கிய அனீஸ் பாஸ்மி ‘வெல்கம் 2' என்ற படம் இயக்குகிறார். இப்படத்தில் நடிக்க முதலில் சோனாக்ஷி சின்ஹாவிடம் பேசினார். அவர் கால்ஷீட் தர மறுத்ததால் அசினையே ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தார். அசினை சந்தித்து கால்ஷீட் கேட்டார். அப்போது அசினுக்கு ரூ. 1 கோடிக்குமேல் சம்பளம் தர வேண்டும் என்று அவரது தந்தை ஜோசப் கூறினாராம்.
சம்பளத்தை குறைக்க கேட்டபோது மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து அங்கிருந்து புறப்பட்ட பாஸ்மி நேராக ஸ்ருதி ஹாசனை சந்தித்து அவரை ஒப்பந்தம் செய்தார்.
Comments
Post a Comment