1st of July 2013
சென்னை::வயதான ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்க நயன்தாரா மறுத்துவிட்டார். ஏற்கனவே ரஜினியுடன் 'சந்திரமுகி' படத்தில் நடித்தார். பாலகிருஷ்ணாவுடன் 'ஸ்ரீராம ராஜ்ஜியம்' என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். தற்போது மீண்டும் புதுப்படமொன்றில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் நயன்தாரா மறுத்து விட்டார்.
தன்னை விட 10 வயது அதிகமான கதாநாயகர்களுடன் நடிக்க ஆட்சேபனை இல்லை. 15 வயது அதிகமான ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.
மூத்த நடிகர்களுடன் ஜோடியானால் இளம் ஹீரோக்கள் ஒதுக்கி விடுவார்கள் என பயந்தே இந்த முடிவை எடுத்துள்ளாராம். நயன்தாரா கைவசம் இப்போது 6 படங்கள் உள்ளன.
அஜீத் ஜோடியாக பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார். ஆர்யாவுடன் ‘ராஜா ராணி’ படத்திலும், உதயநிதியுடன் ‘இது கதிர்வேலன் காதல்’ படத்திலும் நடிக்கிறார். இந்தியில் வித்யாபாலன் நடித்து ஹிட்டான ‘கஹானி’ படம் தமிழ், தெலுங்கில் ’அனாமிகா’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் கர்ப்பிணி வேடத்தில் நயன்தாரா நடிக்கிறார். ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். ஹரி இயக்கும் படத்திலும் நடிக்கிறார்.

Comments
Post a Comment