29th of July 2013
சென்னை::கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு இறக்குமதியான நஸ்ரியா நசீம், தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி பிஸியான ஹீரோயினாகியுள்ளார்.
நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவருடைய நேரம் ரொம்ப நன்றாகவே உள்ளதால், பெரிய பெரிய பட நிறுவனங்கள், ஹீரோக்கள் என்று நஸ்ரியா ஏகப்பட்ட பிஸி. இந்த பிஸியிலும், பொண்ணு எப்போதும் புத்தகமும், கையுமாக தான் இருக்கிறாராம். அப்படிப்பட்ட புத்தக பிரியரா அவர்! என்று விசாரித்ததில், நஸ்ரியா தற்போது பி.காம் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருக்கிறாராம்.
இப்போ, எந்த அலுவலகத்தில் போய் கணக்கு பார்க்கப் போகிறார்! என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. இதை அவரிடமே கேட்டதற்கு, "நான் குழந்தை நட்சத்திரமாக தான் சினிமாவில் நடிக்கத் துவங்கினேன். நடித்துக் கொண்டே படித்து வந்தேன். பிளஸ் 2 படித்த போது, ஒரு மலையாள படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. இப்போது, பல படங்களில் ரொம்ப பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறேன். ஆனாலும், நடிப்பை போலவே படிப்பிலும் மிகுந்த ஆர்வம் உண்டு. அதனால் தான், தற்போது கேரளாவில் உள்ள கல்லூரியில் பி.காம்., படித்து வருகிறேன். முடிந்தவரை, படிப்பு பாதிக்காத வகையில், படங்களுக்கு கால்ஷீட் கொடுக்கிறேன்." என்று ரொம்ப சாமர்த்தியமாக பதில் கூறினார்.

Comments
Post a Comment