1st of July 2013
சென்னை::பாஸ், நிகிஷா படேல், சந்தானம் மற்றும் பலர் நடிக்கும் ‘தலைவன்’ படத்திலிருந்து அதன் இயக்குனர் ரமேஷ் செல்வன் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “D.S.ரமேஷ் செல்வன் ஆகிய நான் தமிழ்நாடு திரைப்படக்கல்லூரியில் இயக்குனர் பிரிவில் பட்டம் பெற்றுள்ளேன். எனது முதல் திரைப்படம் உளவுத்துறை,’ அதற்கு பிறகு ‘ஜனனம்’ திரைப்படத்தை இயக்கி உள்ளேன்.
‘கலவரம்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறேன். அது தற்போது முடிவடைந்த நிலையில் உள்ளது.
இதற்கிடையே தலைவன் என்ற திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. இரவுபகல் பாராமல் தலைவன் திரைப்படத்தின் பணிகளை கவனித்து வந்தேன். திரைப்பட வேலைகள் அதிகமாக இருந்ததால் என்னால் எனது உடல் நிலையை கவனிக்க முடியாமல் இருந்து வந்தது.
எனது உடல் நிலையை கவனிக்காமல் பணி புரிந்து வந்ததால் எனக்கு சர்க்கரை , பிளட் பிரஷர் மற்றும் மன அழுத்தம் அதிகமாகி உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. எனது மருத்துவர் கட்டாய சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று அறிவுரை (medical advice) வழங்கியுள்ளார்.
எனவே சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியிருப்பதால் தற்போது இயக்குனராக பணிபுரியும் தலைவன் திரைப்படத்தின் இயக்குனர் பொ
றுப்பிலிருந்து விலகிக்கொள்கிறேன்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment