இப்போதைக்கு திருமணமில்லை – சமந்தா!!!

3rd of July 2013
சென்னை::சமந்தா – சித்தார்த் இருவருக்கும் காதல் என தமிழ், தெலுங்கு  மீடியாக்கள் பரபரப்பான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.
ஆனால், சமந்தாவோ இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளம் எண்ணமில்லை என தெலுங்கு தயாரிப்பாளர்களிடமும், இயக்குனர்களிடமும் தெரிவித்துள்ளதாக தெலுங்கு மீடியாக்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
 
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா பேசும் போது, “சித்தார்த் என் நெருங்கிய நண்பர். இப்போதைக்கு எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய விவரங்களை மீடியாக்களிடம் பகிர்ந்து கொள்ளும் எண்ணமில்லை. எங்களது பழக்கம் பற்றி சரியான நேரத்தில்  தெரிவிப்போன்,” என்று கூறியுள்ளார்.
சமந்தா, தற்போது நான்கு தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.
 
லிங்குசாமி இயக்கத்தில், சூர்யாவுடன் விரைவில் ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்கப் போகிறார்.
 
சமந்தா, சமர்த்தாக பேசுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

Comments