சிறப்பு அனுமதி வாங்கி ஐதராபாத் ரயில்வே ஸ்டேஷனிலேயே செட் அமைத்து வாலு சண்டைக்காட்சி!

2nd of July 2013
சென்னை::நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்கும் படம், ‘வாலு’. சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உட்பட பலர் நடிக்கின்றனர். விஜய் சந்தர் இயக்குகிறார். இதன் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்துவருகிறது. அங்கு தனது பிறந்த நாளை நேற்று முன்தினம் கொண்டாடிய விஜய் சந்தர் கூறியதாவது: இது காமெடியான காதல் கதை. சிம்புவும் சந்தானமும் வரும் காட்சிகள் அனைத்தும் கலகலப்பாக இருக்கும். ஹன்சிகாவும் காமெடி பண்ணியிருக்கிறார்.

படத்தின் சண்டைக்காட்சியை ஐதராபாத் அருகில் உள்ள லிங்கப்பள்ளியில் எடுத்துவருகிறோம். சிறப்பு அனுமதி வாங்கி ரயில்வே ஸ்டேஷனிலேயே செட் அமைத்து படப்பிடிப்பை நடத்துகிறோம். இரண்டு ரயில்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. இதில் சிம்புவும் சண்டைக்கலைஞர்களும் மோதும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. படத்தின் ஹைலைட்டான விஷயங்களில் இந்த சண்டைக்காட்சியும் ஒன்றாக இருக்கும். கனல் கண்ணன் சண்டைக்காட்சிகளை அமைத்து வருகிறார்.

Comments