1st of July 2013
சென்னை::ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் நடிகை பாவனா நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான சகுனி, அலக்ஷ்பாண்டியன் ஆகிய இரண்டு படங்களும் தொடர் தோல்வியை சந்தித்தன. இதனால் தன்னுடைய அடுத்த படத்தை எப்படியாவது வெற்றிப் படமாக கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறார். தற்போது கார்த்தி ஒரே நேரத்தில் பிரியாணி, ஆல் இன் ஆல் அழகுராஜா என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இதில் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் கார்த்திக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இப்போது அந்தப் பட்டியலில் மேலும் ஒரு நடிகை இணைந்திருப்பதுதான் லேட்டஸ்ட் தகவல். அவர் வேறு யாருமில்லை, சித்திரம் பேசுதடி படத்தில் நாயகியாக அறிமுகமான பாவனாதான்.
படத்தில் புதுசாக பாவனாவை உள்ளே கொண்டு வந்திருப்பது கார்த்திதானாம்.
படமே முடிந்த பின்பும் கதையில் மேலும் பல திருத்தங்கள் செய்து இப்போது இருபது நாட்கள் ஷுட்டிங் கிளம்புகிறார்களாம். இதற்காக பாவனா தொடர்ச்சியாக இருபது நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.
Comments
Post a Comment