12th of July 2013
சென்னை::இந்தியில் மாபெரும் வெற்றிப் பெற்ற 3 இடியட்ஸ் என்ற படத்தை தமிழியில் 'நண்பன்' என்ற தலைப்பில் ரீமேக் செய்தனர். இதனை பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்க, விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்தனர். நேரடிப் படங்களை இயக்கி வந்த ஷங்கர் முதல் முறையாக இப்படத்தின் மூலம் ரீமேக் படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், விஜய் - ஷங்கர் கூட்டணி மீண்டும் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர். தற்போது புதுமுக இயக்குநர் நேசன், இயக்கத்தில் 'ஜில்லா' படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் விஜய், அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்குப் பிறகு ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறாராம். இயக்குநர் ஷங்கர் தற்போது விக்ரமை வைத்து இயக்கிவரும் 'ஐ' படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறாராம்.
2014ஆம் ஆண்டில் நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ஷங்கர் ஆகிய இருவர் படங்களுக்கு மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.
'நண்பன்' மூலம் ஷங்கருடன் இணைந்து வெற்றிக் கொடுத்த விஜய், தற்போது மீண்டும் இயக்குநர் ஷங்கருடன் கைகோர்க்க உள்ளாராம்.இந்த நிலையில், விஜய் - ஷங்கர் கூட்டணி மீண்டும் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர். தற்போது புதுமுக இயக்குநர் நேசன், இயக்கத்தில் 'ஜில்லா' படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் விஜய், அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்குப் பிறகு ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறாராம். இயக்குநர் ஷங்கர் தற்போது விக்ரமை வைத்து இயக்கிவரும் 'ஐ' படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறாராம்.
2014ஆம் ஆண்டில் நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ஷங்கர் ஆகிய இருவர் படங்களுக்கு மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.
Comments
Post a Comment