சென்னை::விஜய் இதுவரை நடித்த படங்களில் மிக பிரமாண்டமான பட்ஜெட்டில், அதிரடியான விளம்பரங்களுடன் வெளியாக இருக்கிறது தலைவா. அதேபோல், தமிழில் வெளியாகிற அதே நாளில் தெலுங்கிலும் தலைவா படத்தை வெளியிடப்போகிறார்களாம். ஏற்கனவே விஜய் நடித்த நண்பன், துப்பாக்கி ஆகிய படங்கள் அங்கு பெரிய அளவில் வசூல் சாதனை புரிந்ததால், தெலுங்கு ரைட்ஸே பெரிய தொகைக்கு விற்பனை செய்துள்ளார்களாம். அதேபோல் மலையாளத்திலும் விற்பனை செய்யப்பட்டிருக்கிறதாம்.
இந்தநிலையில், தலைவா படத்தை இந்தியிலும் அடுத்து ரீமேக் செய்ய அப்படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் திட்டமிட்டுள்ளாராம். தற்போது தனுஷ் ராஞ்சனாவில் இந்தியில் கால்பதித்ததைத் தொடர்ந்து அடுத்து ஜாக்பாட் என்ற படம் மூலம் பரத்தும் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கிறார். இதையடுத்து விஜய்யும் தலைவா ரீமேக் மூலம் இந்தியில் என்ட்ரி கொடுப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால், தலைவா படம் ரிலீசான பிறகுதான் இந்தி பதிப்பில் யார் யார் நடிக்கிறார்கள் என்கிற விவரம் முழுமையாக வெளியிடப்படுமாம்.

Comments
Post a Comment