விஜய் தங்கையாக நிவேதா தாமஸ்!!!

3rd of July 2013
சென்னை::சரஸ்வதி சபதம் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடிக்கிறார் நிவேதா தாமஸ். ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்கும் போதே இன்னொரு படத்தில் தங்கையாக நடிக்க யோசிப்பார்கள். நிவேதாவுக்கு யோசனையேயில்லை. உடனே சரி என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்.
 
விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடிக்கும் ‌ஜில்லாவில் விஜய்யின் தங்கையாக நடிக்கிறார் நிவேதா. எப்படி இந்த ரோலில் நடிக்க ஒப்புக் கொண்டீர்கள் என்றால் சட்டென்று பதில் தருகிறார், லாலேட்டனின் மகளாக நடிக்கிறது என்றால் சும்மாவா...?
 
(லாலேட்டன் - மோகன்லால். லால் அண்ணன் என்று மலையாளிகள் அவரை செல்லமாக அப்படிதான் கூப்பிடுகிறார்கள்)
ஜில்லாவில் மோகன்லாலின் மகளாக நடிக்கிறாராம் நிவேதா தாமஸ். அவால்ன் அண்ணனாக விஜய். அதாவது மோகன்லாலின் மகனாக விஜய் நடிக்கிறார். மலையாள நடிகையான நிவேதா தாமஸ் மோகன்லாலின் மகள் என்றதும் தங்கை ரோல் தமக்கை ரோல் என்றெல்லாம் பார்க்காமல் உடனே நடிக்க ஒத்துக் கொண்டிருக்கிறார்.

Comments