மரியானுக்கு சோனம் கபூரின் பாராட்டு!!!

3rd of July 2013
சென்னை:சோனம் கபூர் நடித்த முந்தைய ஹிந்தி படங்கள் சுமாரான வெற்றியே பெற்றிருந்ததால் அதிகம் பேசப்படாமல் இருந்த சோனம் கபூருக்கு ‘ரான்ஜனா’ பெரும் பெயரையும், புகழையும் பெற்று தந்திருக்கிறது. இந்த படத்தில் தனுஷுடன் ஜோடி போட்டு கலக்கிய சோனம் கபூர் இப்போது தனுஷ் புராணம் பாடிக்கொண்டிருக்கிறார் போல! ‘ரான்ஜனா’வின் மாபெரும் வெற்றிக்கு காரணமானவர்களில் தனுஷ் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் மிக முக்கியமானவர்கள் என்று கூறியுள்ள சோனம்,

தனுஷ் யு ஆர் தி பெஸ்ட், உங்களுடைய மரியானை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்று டுவீட் செய்து, தனுஷ் மீது தனக்கிருக்கும் கிரேஸை வெளிப்படுத்தியிருக்கிறார்.

Comments