1st of July 2013
சென்னை::தங்களுடன் டூயட் பாடும் நடிகர்களை அந்த படத்தில் நடித்து முடித்த பிறகு அதற்கடுத்து ஜோடி சேர்ந்தால்தான் சந்திப்பார்கள் நடிகைகள். அப்படி இல்லையேல் ஏதாவது சினிமா விழா மற்றும் விருந்து நிகழ்ச்சிகளில் சந்தித்துக்கொள்வார்கள். ஆனால் இந்த விசயத்தில் அமலாபால் மாறுபட்டவராக இருக்கிறார்.
ஒரு படத்தை முடித்து விட்டு அடுத்த படத்தில் நடிக்கும்போதும் முந்தைய பட நாயகர்களுடன் தொடர்பில் இருக்கிறார்.
முக்கியமாக, அவர்களை வீடு வரை நட்பு பிடித்துக்கொள்பவர், ஓய்வு கிடைக்கும்போது விசிட் அடிக்கிறாராம். ஆனால், சில மேல்தட்டு ஹீரோக்கள் நடிகைகளை வீடு வரைக்கும் அனுமதிப்பதில்லை என்கிறபட்சத்தில், தான் சென்னை வரும்போது அவர்களை எப்படியாவது போனில் பிடித்து, தான் தங்கியிருக்கும் நட்சத்திர ஹோட்டல்களுக்கு வரவைத்து விருந்து உபசரிப்பு நடத்துகிறார். அதனால் பல ஹீரோக்கள் இப்போதும் அமலாபாலின் தொடர்பில் இருக்கிறார்களாம்.
என்றாலும, சமீபத்தில் தன்னுடன் நடித்த ஒரு மெகா ஹீரோவுக்கு இதுவரை பலதடவை அழைப்பு விடுத்து விட்டாராம் அமலாபால். ஆனால், நடிகர் அம்மணி இருக்கிற பக்கம் தலைகாட்டவே மறுக்கிறாராம். இதை தனது அபிமானிகளிடம் சொல்லி பீல் பண்ணிக்கொண்டிருக்கிறாராம் அமலா.
Comments
Post a Comment