3rd of July 2013
சென்னை::இதற்கு வேறு மாதிரி அர்த்தம் கற்பிக்க தேவையில்லை. சிம்பு நடிக்கும் வாலு படத்தின் விநியோக உரிமையை சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது.
முந்தைய ஆட்சியில் ராஜாவும் மந்திரியுமாக அனைத்து பெரிய படங்களின் விநியோக உரிமையையும் வாங்கி ஏகபோகமாக இருந்த சன் பிக்சர்ஸ் இந்த ஆட்சியில் கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறது. ஆட்சி காரணமில்லை, புதிதாக வந்திருக்கும் போட்டி அப்படி.
எத்தனை கோடி சொன்னாலும் கேஷ் அண்ட் கேரியாக படங்களை வாங்கிக் கொள்கிறது வேந்தர் மூவிஸ். விஜய்யின் தலைவா, அஜித்தின் பெயரில்லா படம் (ஆமாம், படப்பிடிப்பு முடிந்த பிறகும் பெயர் வைக்காத படத்தை வேறு எப்படி சொல்வது?) என்று படா படங்களெல்லாம் வேந்தரின் பாக்கெட்டில்.
இப்படியே போனால் பொங்கலுக்கும், தீபாவளிக்கும் சன் தொலைக்காட்சியில் கில்லியைதான் மீண்டும் ஒளிபரப்பியாக வேண்டும். அதனால் உஷாராக வேந்தர் கால் பதிக்காத பகுதிகளில் பேரத்தை தொடங்கியிருக்கிறார்கள். முதல் வெற்றி சிம்புவின் வாலு. விஷாலின் பட்டத்து யானையை பிடித்துப் போடும் ஐடியாவும் சன்னுக்கு இருப்பதாக கேள்வி.
Comments
Post a Comment