கதாநாயகியானார் ‘ஸ்லம்டாக் மில்லினர்’ படத்தின் குழந்தை நட்சத்திரம்!!!

1st of July 2013
சென்னை::ஆஸ்கர் விருதுகளை வென்ற ‘ஸ்லம்டாக் மில்லினர்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், தன்வி லோங்கர்.
இவர், ‘சந்தித்தேன் உன்னை’ என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.
 
இதேபோல் ‘அழகி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கவுஷிக் ராம் மற்றும் வெற்றி ஆகிய இருவரும் நாயகர்களாக அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் இணைந்து சொப்னா பானர்ஜி, ஜே.கே.ஆதித்யா, காதல் தண்டபாணி, பாணா காத்தாடி புகழ் உதய் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
 
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி படத்தை நாகமானிசி இயக்குகிறார். இவர், பல விளம்பர படங்களை இயக்கியவர். அதோடு இவர், ஜே.கே.ஆதித்யாவுடன் இணைந்து படத்தை தயாரிக்கவும் செய்கிறார். லண்டன் டினிடி கல்லூரியில் பியானோ மற்றும் வயலினில் ‘டாப் கிரேட்’ வாங்கிய மிதுன் ஈஷ்வர், இந்த படத்தின் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். ஒளிப்பதிவை சாலி கவனிக்கிறார்.
 
இது, ஒரு வித்தியாசமான காதல் கலந்த திகில் படமாக உருவாகிறது. கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் மூணாறு ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.

Comments