3rd of July 2013
சென்னை::ஹாலிவுட் படங்கள், ஆல்பம், லைவ் கான்சர்ட் என்று வருடத்தில் முக்கால்வாசி நாட்கள் வெளிநாடுகளில் தங்கும் ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் சுதேசி படங்களுக்கு முக்கியத்துவம் தர முன் வந்திருக்கிறார்.
ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் ரஹ்மான் இசையமைத்தால் மட்டுமே சிடி கள் விற்கின்றன, யூ டியூபில் ஹிட்ஸ் எகிறுகிறது. இளையராஜாவைப் போல வருமா, அவர் 21 ஆம் நூறறாண்டின் இசை மேதை என மேடையில் புகழும் உச்ச நடிகர்களும், மிச்ச நடிகர்களும்.படம் நடிப்பதாக இருந்தால் வண்டியை முதலில் ரஹ்மான் வீட்டிற்குதான் விடுகிறார்கள். ரஹ்மான் இசையமைத்தால் அந்தப் படத்திற்கு சந்தை மதிப்பு கூடி விடுகிறது.
நிற்க. ரஹ்மானை வைத்து இசையமைக்க வேண்டும் என்ற கனவில் இருக்கும் இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இனிப்பான செய்தி. இந்தி மற்றும் தமிழ் சினிமாவுக்கு அதிக அளவில் இசையமைக்க இருக்கிறார் ஏ.ஆர். தமிழில் மரியான் படத்துக்கு இசையமைத்திருப்பவர் கூடுதலாக மூன்று படங்களுக்கு இசையமைக்கிறார். அதில் இரண்டு துருவ நட்சத்திரம், காவியத்தலைவன் (மூன்றாவது மணிரத்னம் இயக்கும் படம்...?).
இந்தியில்...
பத்து படங்களுக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். ரஹ்மான் என்றால் பட்ஜெட் தாங்காது என தமிழ்ப்பட இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ரஹ்மானை அணுகாமல் இருப்பதுதான் ரஹ்மான் குறைந்த எண்ணிக்கையிலான தமிழ்ப் படங்களுக்கு இசையமைக்க காரணம்.
ஆனால் சப்ஜெக்ட் நன்றாக இருந்தால் பணம் பிரச்சனையில்லை என சமீபத்தில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் கோடிட்டு காட்டினார் ஏ.ஆர்.ஆக, விருப்பம் உள்ளவர்கள் சப்ஜெக்ட் நன்றாக இருந்தால் ரஹ்மான் வீட்டுக் கதவை தட்டலாம்.
Comments
Post a Comment