பூர்ணா நடித்த வேடத்தை ஏற்க மறுத்தார் யாமி. ராதா மோகன்!!!

2nd of July 2013
சென்னை::பூர்ணா நடித்த வேடத்தை ஏற்க மறுத்தார் யாமி. ராதா மோகன் இயக்கிய ‘கவுரவம்‘ படத்தில் அறிமுகமானவர் யாமி கவுதம். பல்வேறு இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
 
நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்தபோது பேய் பற்றிய திகில் அனுபவத்தை எதிர்கொண்டு பயந்ததாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவத்தை மையமாக கொண்டு அவ்னு என்ற பெயரில் தெலுங்கு படத்தை இயக்கினார் ரவிபாபு. பூர்ணா நடித்திருந்தார். இப்படம் ஹிட்டானது. இதை இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்த இயக்குனர் யாமி கவுதம் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்தார். அவரிடம் கால்ஷீட் கேட்டபோது நடிக்க மறுத்துவிட்டார்.
 
இதுபற்றி இயக்குனர் கூறும்போது, ‘இந்த கதாபாத்திரத்தில் நடிக்க யாமிக்கு விருப்பம் இல்லை. எனவே அவரை வற்புறுத்தவில்லை. இது எந்தவிதத்திலும் கதையை பாதிக்காது. இந்த வேடத்துக்கு மற்றொரு ஹீரோயினை எளிதாக என்னால் தேர்வு செய்ய முடியும் என்றார். யாமியின் சொந்த அனுபவ கதையான இதில் பூர்ணா நடித்தது அவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டதாலேயே இந்தியில் அவர் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

Comments