சென்டர் ஃபிரஷ் அம்பாசிடரானார் தனுஷ்!!!

3rd of July 2013
சென்னை::தனுஷின் இந்திப்பட பிரவேசம் அவருக்கு விளம்பரத்துறையின் கதவுகளை அகல திறந்திருக்கிறது. லக்ஸை தொடர்ந்து சென்டர் ஃபிரஷ் பொருட்களின் விளம்பர தூதுவராக தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
ராஞ்சனா இரண்டாவது வார முடிவில் 45 கோடி அளவுக்கு வசூல் செய்துள்ளது. வெளிநாடுகளின் வசூலையும் சேர்த்தால் ஐம்பது கோடியை தாண்டும். படம் ஹிட். ஆனால் நூறு கோடியை எட்டுவது சிரமம்.
இந்திப்படவுலகுக்கு பொருத்தமில்லாத பர்சனாலிட்டி உங்களுடையது என்று இந்தி மீடியாக்கள் சில தனுஷிடம் நேரடியாவே கேட்டன. அந்தளவு வன்மம்.
 
அவர்களின் எரிச்சலை அதிகப்படுத்தும் விதமாக லக்ஸ் பியூட்டி சோப் விளம்பரத்தில் தனுஷை நடிக்க வைத்திருக்கிறார்கள். அதையடுத்து சென்டர் ஃபிரஷ்ஷின் விளம்பர தூதுவராகவும் தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
 
அழகு என்பது அழகு சாதன உற்பத்தியாளர்கள் சொல்லும் சிவத்த தோலிலோ, பாலிஷ் சருமத்திலோ, பளபள முகத்திலோ இல்லை... அது அவரவர் திறமையில் இருக்கிறது என்பதை தனுஷின் விளம்பரப்பட வாய்ப்புகள் உணர்த்துகிறது. சிவப்பழகு க்ரீம் பூசுகிறவர்கள் தயவுசெய்து புரிந்து கொள்வார்களாக.

Comments