15th of July 2013
சென்னை::10 நாட்களுக்கு முன்னர் தெலுங்கு திரையுலகம்தான் என் வீடு என்று பேசிய ‘பாலிவுட் இயக்குனர்’ பிரபுதேவா, சமீபத்திய பேட்டி ஒன்றில் தமிழ்த் திரையுலகில் நடனம் ஆடத் தெரிந்த நடிகர்கள் யார் யார் எனக் கூறி மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்.
உங்கள் பார்வையில் சிறப்பாக நடனமாடும் நடிகர்கள் யார் யார் ? என்ற கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில், “சிரஞ்சீவி, ஹிரித்திக், ஷாகித், ரன்பீர், ராம் சரண், அல்லு அர்ஜுன், ஜுனியர் என்டிஆர், தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி. நடிகைகளில் மாதுரி தீட்சித், ஸ்ரீதேவி, பிரியங்கா சோப்ரா, சோனாக்ஷி சின்ஹா” என பதிலளித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் தற்போதைய இளம் நடிகர்களில் அட்டகாசமாக நடனமாடுபவர்களில் முதன்மையானவர் நடிகர் விஜய் என சின்ன குழந்தையைக் கேட்டால் கூட சொல்லி விடும்.
சீனியர் நடிகர்களில் கமல்ஹாசனைப் போல் சிறந்த நடனமாடுபவர் யாருமேயில்லை.
அப்படியிருக்க பிரபுதேவா இவர்களிருவரையும் குறிப்பிடாதது ஏன் என்று புரியவில்லை.
இதே பிரபுதேவாதான், அக்ஷய் குமாரை வைத்து எடுத்த ஹிந்திப் படமான ‘ரவுடி ரத்தோர்’ படத்தில் விஜய்யை அழைத்து நடனமாட வைத்தார். அக்ஷய் குமார் விஜய்யின் நடன அசைவுகளைப் பார்த்து ஆடிப்போய் விட்டார்.
அதே போல சமீபத்தில் விஜய் டிவி விருதுகள் வழங்கும் விழாவில் நடிகர் ஷாரூக் கான் விஜய்யை பாராட்டியதும் நினைவிருக்கலாம்.
பிரபுதேவாவின் இந்த பேட்டி கண்டிப்பாக சர்ச்சையை கிளப்பும் என்பதில் சந்தேகமில்லை.
Comments
Post a Comment