4th of July 2013
சென்னை::நடிகை ஸ்ருதி ஹாசன், "டி-டே என்ற பாலிவுட் படத்தில், பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார். அந்த படத்தின் புகைப்படங்கள், சமீபத்தில் பத்திரிகைகளில் வெளியாகின. இதைப் பார்த்ததும், ஒரு தரப்பிலிருந்து, கிளாமர் காட்சி களில், ஸ்ருதி, லிமிட்டை தாண்டி நடிப்பதாக, கடுமையான விமர்சனம் எழுந்தது.
இதைக் கேள்விப்பட்டதிலிருந்து, கடும் டென்ஷனில் இருக்கிறார், ஸ்ருதி. அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில்,"நடிப்பு, என் தொழில். அதற்கு என்ன தேவையோ, அதைச் செய்கிறேன். படத்தில், என் கேரக்டர் எப்படி இருக்க வேண்டும் என, இயக்குனர் நினைக்கிறாரோ, அப்படி செய்து கொடுக்க வேண்டியது,என் பொறுப்பு. நீச்சல் உடையில் நடிக்க வேண்டும் என்றால், நடித்து தான் ஆக வேண்டும்.
இதைவிட, கிளாமராக பலர் நடித்துள்ளனர். அப்போதெல்லாம் வராத விமர்சனங்கள், இப்போது, என்னை குறிவைத்து வருவது, கவலை அளிக்கிறது என்கிறார். மேலும், அவர்,"பெண்கள், சமையல் அறைக்குள் அடைபட்டு கிடந்த காலமெல்லாம், மலையேறி விட்டது. என்னை பொறுத்தவரை, எனக்கு, திருமணம் ஆனாலும், அதற்கு பின்னும் நடிப்பேன் என்கிறார்.
Comments
Post a Comment