அ‌‌‌ஜீத் படமும் அவங்களுக்குதான்!!!

3rd of July 2013
சென்னை::வேந்தர்னு சொன்னாலே போட்டியாளர்கள் வெலவெலத்துப் போகிறார்கள். ஆனால் தயா‌ரிப்பாளர்களுக்கு வேந்தர் என்றால் வெல்லக்கட்டி.
சமீபத்தில் வெளியான தில்லு முல்லு, எதிர்நீச்சல் படங்களின் தமிழக விநியோக உ‌ரிமையை வாங்கிய வேந்தர் மூவிஸ் தலைவா படத்தின் விநியோக உ‌ரிமையையும் கைப்பற்றியிருக்கிறது.
 
போட்டியாளர்களுக்குள் பெரும் புகைச்சலை இதன் மூலம் ஏற்படுத்தியவர்கள் அ‌‌‌ஜீத் நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கியிருக்கும் பெய‌ரில்லா படத்தின் விநியோக உ‌ரிமையை பெறுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
 
ஆர்வம் என்ன... பேசி முடிச்சாச்சு என்கிறார்கள் சிலர். கோடம்பாக்கத்தின் காலநிலையை கணித்தால் அ‌‌‌ஜீத் படத்தின் பண மழை வேந்தருக்குதான் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாகவே தெரிகிறது.

Comments