சிவகார்த்திகேயன் காட்டில் அடைமழை!!!

1st of July 2013
சென்னை::கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'எதிர்நீச்சல்' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் காட்டில் அடைமழை பெய்கிறதாம்.

பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமின்றி, முன்னணி நடிகைகளும் இவருடன் நடிப்பதற்கு போட்டிபோடுகிறார்களாம்.

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் எஸ்.மதன், ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் தனுஷ், இயக்குநர் லிங்குசாமி ஆகியோர் தனித்தனியாக தயாரிக்கும் படங்கள் சிவகார்த்திகேயனுக்கு வரிசைகட்டி நிற்கின்றன.

நடிகர் தனுஷ் தயாரிக்கும் படத்தை 'எதிர்நீச்சல்' படத்தின் இயக்குநர் துரை.செந்தில்குமார் இயக்க உள்ளார்.

இயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் படத்தை பூபதி பாண்டியன் இயக்குகிறார். 'பட்டத்து யானை' ரிலீஸிற்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார்.
இதைப் பார்த்து மற்ற தயாரிப்பாளர்களும் தங்களுடைய படங்களில் முன்னணி நடிகைகளை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

Comments