கௌதமின் ராசி - ஒளி மங்கும் துருவ நட்சத்திரம்!!!

3rd of July 2013
சென்னை::துருவ நட்சத்திரம்... பெயரெல்லாம் நல்லாதான் இருக்கு ஆனால் பிராகிரஸ்தான் சரியில்லை. என்றோ தொடங்கியிருக்க வேண்டிய படப்பிடிப்பு இன்னமும் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.
 
கதாநாயகியில் தொடங்கியது பிரச்சனை. அது இன்னும் அப்படியே இருக்கையில், ஸ்கிரிப்டில் இன்னும் கொஞ்சம் வொர்க் பண்ணணும், படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கேன் என்று பேட்டி தந்தார் சூர்யா. கௌதமிடமிருந்து நோ கமெண்ட்.
 
ஏற்கனவே விஜய், அஜித் படங்களை கௌதம் இயக்குவதாக இருந்து (விஜய் படம் விளம்பரம் எல்லாம் தந்த பிறகு) ட்ராப்பானது. அஜித் படத்துக்கு துப்பறியும் ஆனந்த் என்று பெயரும் வைத்தனர். விஜய்க்கு யோஹன் அத்தியாயம் ஒன்று.
 
சூர்யாவின் ஜவ்வு மிட்டாய் பேச்சைப் பார்த்தால் யோஹன், துப்பறியும் ஆனந்த் லிஸ்டில் இந்த நட்சத்திரமும் இணைந்துவிடும் போலிருக்கிறது. இன்னொரு காரணம், ஆகஸ்டில் சூர்யா நடிக்கும் படத்தை இயக்க லிங்குசாமி எப்போதோ தயாராகிவிட்டார்.
கௌதம் ஒருமுறை காளஹஸ்தி சென்று வந்தால் என்ன.

Comments