5th of July 2013
சென்னை::தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெற்றிபெற்ற படம் உனக்கும் எனக்கும். இரண்டு மொழிகளிலும் படத்தை பிரபுதேவாதான் இயக்கி இருந்தார்.
தமிழ், தெலுங்கில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் இதன் இந்தி ரீமேக்கையும் பிரபுதேவாவே இயக்கியுள்ளார். இந்தியில் 'ராமய்யா வஸ்தாவய்யா' என்ற பெயரில் படம் தயாராகி உள்ளது. இதில் ஜெயம் ரவி வேடத்தில் க்ரிஷும், த்ரிஷா வேடத்தில் ஸ்ருதி ஹாசனும் நடித்திருக்கின்றனர். இப்படம் வரும் 19ம் தேதி இந்தியில் வெளியாக இருக்கிறது.
இதனையொட்டி படத்தை புரமோஷன் செய்யும் பணியில் பிரபுதேவா ஈடுபட்டுள்ளார். ஆனால் படத்தின் எந்த புரமோஷன் நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் புறக்கணித்து வருகிறாராம் ஸ்ருதிஹாசன். இதற்கு பிரபுதேவாவுடன் ஸ்ருதிக்கு ஏற்பட்ட மனஸ்தாபம்தான் காரணம் என்று கூறப்படுகிறது. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பின்போது பிரபுதேவா செய்து காட்டிய சில நடன அசைவுகளின்படி ஸ்ருதி நடிக்கவில்லையாம். இதனால் பிரபுதேவா டென்ஷன் வரவே பதிலுக்கு ஸ்ருதியும் கோபப்பட்டிருக்கிறார்.
இதையடுத்து பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் நாயகன் க்ரிஷுடன் பிரபுதேவாவும் பங்கேற்பதால் ஸ்ருதி அந்த நிகழ்ச்சிகளை புறகணித்து வருகிறார். ஸ்ருதி வராததால் படத்தில் ஒரு பாட்டுக்கும் ஓரிரு காட்சிகளிலும் நடித்துள்ள ஜாக்குலைனை புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வருகிறார் பிரபுதேவா.
Comments
Post a Comment