கெளதமி ஒருபோதும் எனக்கு அம்மாவாக முடியாது! சொல்கிறார் ஸ்ருதிஹாசன்!!!

1st of July 2013
சென்னை::நடிகர் கமல்ஹாசன்-சரிகா தம்பதிக்கு ஸ்ருதி, அக்ஷரா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, கமல்-சரிகா இருவரும் விவாகரத்து பெற்று விட்டதால், பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் தன்னுடன் சில படங்களில் நடித்த கெளதமியுடன் இப்போது ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார் கமல். கூடவே கெளதமிக்கும் அவரது முன்னாள் கணவருக்கும் பிறந்த மகளும் அவர்களுடன் இருக்கிறார். மேலும், ஸ்ருதி- அக்ஷரா இருவரும் அம்மா சரிகாவுடன் மும்பையில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சமீபத்தில் பெற்றோரின் விவாகரத்து பற்றி ஸ்ருதியிடம் மீடியா சார்பில் கேட்கப்பட்டபோது, அவர்கள் இருவரும் சந்தோசமாக பிரிந்திருக்கிறார்கள். அதனால் எனக்கு அதைப்பற்றி எந்த வருத்தமும் இல்லை. மேலும், என்னைப்பொறுத்தவரை அப்பா, அம்மா இருவருடனும் எப்போதும் போல் நெருக்கமாகத்தான் இருந்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

அவரிடத்தில், தற்போது கெளதமி உங்கள் தந்தையுடன் வாழ்ந்து வருவதால், அவரையும் உங்களது அம்மா என்று அழைப்பீர்களா? என்று கேட்டதற்கு, அவரை எதற்காக நான் அம்மா என்று கூப்பிட வேண்டும். எனக்கு அம்மா சரிகா மட்டும்தான். கெளதமி என் அப்பாவுடன் இருக்கிறார் என்பதற்காக ஒருபோதும் எனக்கு அவர் அம்மாவாகி விட முடியாது என்று சூடாக பதிலளித்துள்ளார் ஸ்ருதி.

Comments