காம்பயர் – நடிகர் – இப்ப பாடகர் ‘சிவகார்த்திகேயன்!!!

15th of July 2013
சென்னை::கலக்கப் போவது யாரு’ல கலந்துக்கிட்டு டைட்டில் ஜெயிச்சி, அப்படியே விஜய் டிவில ‘அது இது எது’ன்னு ஒரு காம்பயர் ஆகி, இன்னைக்கு சினிமாவுல பல வருஷமா ஜெயிக்க போராடிட்டு இருக்கிறவங்களை வருத்தப்பட வைக்கிற அளவுக்கு வளர்ந்துக்கிட்டு வர்றவரு சிவகார்த்திகேயன்.
தொடர்ந்து ஹீரோவா நடிச்ச நாலு படங்களும் ஹிட்டு. இப்ப ஐந்தாவதா அந்த லிஸ்ட்ல இன்னொரு படமும் சேரப் போகுது. அது ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்.’

இன்னைக்கு நடந்த ஆடியோ ரிலீஸ்ல, போட்ட பாடல்களும், டிரைலரும் அந்த வெற்றிக்கு ஒரு அச்சாரம்.
இதுல என்ன விசேஷம்னா இந்த படம் மூலமா சிவகார்த்திகேயன் பாடகராவும் அவதாரம் எடுத்திருக்காரு. ஆனால், உஷாரா பாடறதுக்கு முன்னாடி ஒரு வார்னிங் கொடுத்திடறாரு.

அது என்னன்னா, “குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், இதய நோயாளிகள், இதயம் ரொம்ப பலவீனமா உள்ளவங்க, நீங்க எல்லோரும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. ஏன்னா, நான் பாடப் போறன்னு” சொல்லிட்டு
“ஊரைக் காக்க உண்டான சங்கம்னு’…எடுத்து விடறாரு பாருங்க…பாட்டு நிஜமாவே அதிரடிதான்.

இமான் இசையில் உருவாகியிருக்கிற இந்த பாட்டு அவரோட ‘ஹிட் லிஸ்ட்’ல கண்டிப்பா சேர்ந்துடும்…

பாட்டைப் பார்த்துட்டு நீங்களே சொல்லுங்க…

Comments