1st of July 2013
சென்னை::கமல் மகள் சுருதிஹாசன் படங்களில் கவர்ச்சியாக நடிப்பதற்கு விமர்சனங்கள் கிளம்பியுள்ளது. 'டிடே' என்ற படத்தில் விலைமாது கேரக்டரில் ஆபாசமாக நடிப்பதற்கும் எதிர்ப்புகள் வந்துள்ளன. இதற்கு பதில் அளித்து சுருதிஹாசன் ஐதராபாத்தில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கமல் மகள் எல்லை தாண்டி கவர்ச்சியாக நடிக்கிறார் என்று என்னை விமர்சிக்கின்றனர். சினிமா என்பது ஒரு தொழில் நடிக்க வந்த பிறகு கதை என்ன கேட்கிறதோ அதில் முழுமையாக ஈடுபடவேண்டும். நீச்சல் உடையில் நடிக்க வேண்டிய நிலை வரும் போது நடிக்கத்தான் வேண்டும். அது தவறல்ல. விலைமாது கேரக்டரில் நான் ஆபாசமாக நடிக்கிறேன் என்கின்றனர். கலைகண்ணோட்டத்தோடு அதை பார்க்க வேண்டும். நிறைய நடிகைகள் விலைமாது கேரக்டரில் கவர்ச்சியாக நடித்துள்ளனர். அவர்களை யாரும் விமர்சிக்கவில்லை.
என்மேல் மட்டும் குறை சொல்கிறார்கள். 'டிடே' கதை எனக்கு பிடித்ததால் விலைமாதுவாக நடிக்க ஒப்புக் கொண்டேன். இந்த படத்தில் நடித்தால்தான் திறமையை வெளிப்படுத்த முடியும். விமர்சனங்கள் பற்றி நான் கவலைப்படவில்லை. என் முழு கவனமும் சினிமாவில்தான் இருக்கிறது.
திருமணம் செய்து கொண்டு குழந்தைகளுக்கு அம்மா ஆன பிறகும் சினிமாவில் நடிப்பேன். எனக்கு கணவராக வருகிறவரிடம் திருமணத்துக்கு முன்பே சினிமாவில் போக தடை போடக்கூடாது என்று உறுதிமொழி வாங்கிக் கொள்வேன். சினிமாவில் நடிக்க சம்மதிப்பவரையே திருமணம் செய்து கொள்வேன். திருமணத்துக்கு பிறகு நிறைய நடிகைகள் பலவந்தமாக சினிமாவில் நடிக்கவிடாமல் தடுக்கப்பட்டு உள்ளனர். இதில் எனக்கு உடன்பாடு இல்லை.
பெண்கள் சமையலறையில் இருந்து எப்போதோ வெளியே வந்து விட்டனர். சுயமாக சம்பாதித்து சொந்த காலில் நிற்கிறார்கள். எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. இஷ்ட தெய்வம் முருக கடவுள். கோவில்களுக்கு போவேன். அப்பாவுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. மும்பையில் நான் தனியாகத்தான் வசிக்கிறேன்.
இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.

Comments
Post a Comment