துருவ நட்சத்திரமானார் சமந்தா? சூர்யாவுக்கு ஜோடி?!!!

1st of July 2013
சென்னை::சமீப காலங்களாக நடிகைகளுக்கு ஸ்கூல் யூனிபார்ம் மாட்டிவிடும் புது டிரெண்டில் கவுதமுக்கு இந்தப் படத்தில் ஸ்கூல் யூனிபார்ம் மாட்டும் அளவுக்கு இளமையான ஹீரோயினைக் கண்டுபிடிப்பதில் குழப்பம் ஏற்பட்டது.
திரிஷா, அமலா பால், ராதா மகள் கடல் துளசி என்று சூர்யா ஜோடிக்கான நாயகிகள் பெயர் அடிபட்டன.

இந்த நிலையில் தனது நீதானே பொன் வசந்தம் படத்தில் யூனிபாரம் மாட்டி விட்ட சமந்தாவையே புக் செய்ததுள்ளார் கவுதம்.
கடல் துளசியை புக் செய்ய முடிவுக்கு வந்தபோது முன்னணி நடிகைதான் வேண்டும் என்று சூர்யா அடம் பிடித்தாராம். எனவே சமந்தாவையே ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது.
இருந்தாலும் படப்பிடிப்பு தொடங்கட்டும் இதுவும் சரிதானா என்பதைப் பார்ப்போம்.
அது சரி! சூரியா ஸ்கூலுக்குப் போகமாட்டாரே? நினைத்தாலே பகீர் என்கிறது!

Comments