மற்ற நடிகர்கள் சம்பந்தப்படட பட விழாக்களுக்கும் ஆஜராகி மீண்டும் பரபரப்பு கூட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்: வடிவேலு!!!

1st of July 2013
சென்னை::இரண்டு ஆண்டு இடைவெளிககுப்பிறகு சினிமாவில் என்ட்ரி கொடுத்திருக்கும் வடிவேலு, தான் பிசியாக நடித்து வந்த காலகட்டத்தில்கூட மற்ற நடிகர்களின் பட விழாக்களில் கலந்து கொள்ள மாட்டார். ஆனால், இப்போது மற்ற நடிகர்கள் சம்பந்தப்படட பட விழாக்களுக்கும் ஆஜராகி மீண்டும் பரபரப்பு கூட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
 
அந்த வகையில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் ஆடியோ விழாவுக்கு வருமாறு வடிவேலுவை அழைக்க சென்றார்களாம். அப்போது, வின்னர் படத்துல நான் வச்சிருந்த சங்கத்தின் பெயரிலேயே படம் எடுத்தீட்டீங்களா என்று கேட்டவர், சிறிது நேரம் பழைய நினைவுகள் அசை போட்டாராம். பின்னர் கண்டிப்பாக பங்சனுக்கு வர்றேன்னு வாக்குறுதி கொடுத்துள்ளாராம்.
 
இதனால், உற்சாகமாய் இருக்கிறது வருத்தப்படாத வாலிபர் சங்கம் படக்குழு. காரணம், வடிவேலு கலந்துகிடுறது ஒரு சந்தோசம்னா, வருத்தப்டாத வாலிபர் சங்கம் நடத்தின அவரே இந்த ஆடியோவையும் வெளியிடுறது இன்னொரு சந்தோசம்தானே என்கிறார்கள். இதையடுத்து, வடிவேலுவின் அபிமானிகள் தங்களது பட விழாக்களுக்கும் அவருக்கு அழைப்பு விடுக்க தயாராகி வருகிறார்கள். ஆக, இனி வடிவேலுவை நிறைய சினிமா விழாக்களில் பார்க்கலாம் என்று தெரிகிறது.

Comments