3rd of July 2013
சென்னை::விக்ரம் நடித்த ‘சாமி’ படம் இந்தியில் ‘போலீஸ் கிரி’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. விக்ரம் வேடத்தில் சஞ்சய் தத் நடித்துள்ள இப்படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கியுள்ளார்.
வரும் ஜூலை 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் இப்படத்தை தமிழகம் முழுவதும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இராம.நாராயணனின் மகன் என்.ராமசாமி வெளியிடுகிறார்.
தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘போலீஸ் கிரி,’ மிகப்பிரமாண்டமான முறையில் அதிரடி, ஆக்ஷன் காட்சிகளோடு உருவாகியுள்ளது.
சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள ‘சிங்கம் 2’ படமும் போலீஸ் சம்மந்தப்பட்ட படம் தான், அதே நாளில் வெளியாகும் ‘போலிஸ் கிரி’ படமும், போலீஸ் சம்மந்தப்பட்ட கதை தான்.
மிகப் பெரிய பொருட்செலவில் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான ஆக்ஷன் காட்சிகளோடு உருவாகியுள்ள ‘போலீஸ் கிரி’ இந்திப் படமாக இருந்தாலும், தமிழ் ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில், தமிழ் சினிமா இயக்குனரான கே.எஸ்.ரவிகுமார், இப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment