சென்னை::தனுஷ், சோனம் கபூர் மற்றும் பலர் நடித்து ஏ.ஆர். ரகுமான் இசையில், ஆனந்
த் எல் ராய் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘ராஞ்சனா’ ஹிந்திப் படம் இதுவரை சுமார் 45 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த படம் கடந்த மாதம் 21ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியானது. வெளிநாடுகளிலும் படம் நல்ல வசூலை குவித்து வருகிறதாம்.
இடைவேளைக்குப் பின் வரும் காட்சிகளில் மட்டும் தொய்வு இருந்தாலும், அழகான காதல், இயல்பான நடிப்பு, அருமையான இசை, ஒளிப்பதிவு என இப்படம் ஹிந்தி ரசிகர்களையும், விமர்சகர்களையும் அதிகமாகவே கவர்ந்திருக்கிறது.
தமிழிலும் இப்படம் ‘அம்பிகாபதி’ என டப் செய்யப்பட்டு கடந்த மாதம் 28ம் தேதி வெளியாகியுள்ளது.
Comments
Post a Comment