1st of July 2013
சென்னை::வடிவேலு நடித்து வரும் புதிய படம், "ஜெக ஜால புஜபல தெனாலிராமன். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு, சென்னையிலுள்ள ஏ.வி.எம்., ஸ்டூடியோவில் செட் அமைத்து, 12 நாட்கள் நடந்தது. தெனாலிராமன் கெட்டப்பில், வடிவேலு நடித்த பாடல் காட்சியை முதலில் படமாக்கினர். அதில், வடிவேலுவுக்கு, 42 மனைவிகளும், 56 பிள்ளைகளும் இருப்பது போன்று கேரக்டர்களை வைத்து, பிரமாண்டமாக படமாக்கியுள்ளனர்.

தான் நடிக்கும், ஒவ்வொரு காட்சியும் பேசப்பட வேண்டும் என்று நினைக்கும் வடிவேலு, கேமரா முன் வருவதற்கு நல்ல பயிற்சி எடுத்த பிறகே நடித்தாராம். அடுத்து, தென்மாவட்டங்களில் தெனாலிராமன் படப்பிடிப்பு நடைபெற இருப்பதால், லொகேஷன் பார்க்க இயக்குனர் சென்றுவிட்ட நிலையில், மதுரையில் இருக்கும் தன்
வயதான அம்மாவை பார்க்க புறப்பட்டு விட்டார், பாசக்கார வடிவேலு..
சினிமாவில் மீண்டும் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக இருந்தவர் வடிவேலு. அதனால் பல கதைகள் கேட்டு அதில் ஒரு கதையை செலக்ட் பண்ணி இப்போது ஜெகஜால புஜபல தெனாலிராமன் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனால், இந்த படத்தில் அவர் நடிப்பதற்கு முன்பு அவரை வைத்து படம் தயாரிக்க முன்னணி படாதிபதிகள் யாரும் முன்வரவில்லை.
6 மாதங்களாக பொறுமையாக காத்திருந்த வடிவேலுவே ஒருகட்டத்தில் தயாரிப்பாளர் தேடும் பணியில் இறங்கி செயல்பட்டார். அப்படி கல்பாத்தி அகோரமின் ஏஜிஎஸ் பிலிம்சுக்கும் பல தடவை நடையாய் நடந்திருக்கிறார். அதன்பிறகுதான் அவரை வைத்து படம் பண்ண முன்வந்தார்களாம். அப்போது, தன்னிடம் கதை சொல்லியிருந்த யுவராஜின் கதையை அவர்களிடம் சொல்லி ஓ.கே வாங்கியிருக்கிறார் வடிவேலு.
ஆனால், அப்படி ஒப்பந்தமாவதற்கு முன்பு, அந்த நிறுவனத்துக்கு ஒரு உறுதி மொழியும் அளித்தாராம் வடிவேலு. அதாவது, ஒருவேளை என்னை வைத்து நீங்கள் தயாரிக்கிற படம் தோல்வியடைந்தால், அதற்கு பிராயசித்தமாக உங்களுக்கு 10 படங்களில் காமெடியனாக நடித்து தருவேன் என்றும் வாக்குறுதி அளித்தாராம் வடிவேலு.

Comments
Post a Comment