பட்டத்து யானை’ 26ம் தேதி ரிலீஸ்!!!

15th of July 2013
சென்னை::பூபதி பாண்டியன் இயக்கத்தில் , தமன் இசையமைப்பில் விஷால், ஐஸ்வர்யா அர்ஜுன், சந்தானம் மற்றும் பலர் நடிக்கும் ‘பட்டத்து யானை’ திரைப்படம் இம்மாதம் 26ம் தேதி வெளியாகிறது.
 
குளோபல் இன்ஃபோடெய்ன்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தின் அனைத்து ஏரியாக்களும் விற்றுவிட்டன. படத்தைப் பார்த்த வினியோகஸ்தர்கள், ரசிகர்களை மிகவும் கவரும் என்று பாராட்டியுள்ளனர்.
 
சந்தானம் நகைச்சுவையுடன், விஷாலின் அதிரடி ஆக்ஷனுடன், பூபதி பாண்டியன் இப்படத்தைக் கொடுத்துள்ளார்.
 
நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
 
‘பட்டத்து யானை’ பட்டையைக் கிளப்பட்டும்…

Comments