3rd of July 2013
சென்னை::கமல்ஹாசன் இயக்கம், நடிப்பில் தயராகி வரும் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது.
கடந்த சில வாரங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடைபெற்றது.
சென்னையில் நடைபெற்ற உள்ள படப்பிடிப்பு அநேகமாக படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கமல்ஹாசனுக்கும், ராகுல் போஸுக்கும் இடையிலான கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி இதில் படமாக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
ஆன்ட்ரியா, பூஜா குமார், சேகர் கபூர் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.
தீபாவளி வெளியீடாக இப்படம் வெளிவர வாய்ப்புள்ளது.
Comments
Post a Comment