சூர்யாவின் சிங்கம் 2 நாளை ரிலீஸ்:-சிங்கம் 2 படத்தில் ஹன்சிகா நடிப்பதால் அனுஷ்காவுக்கு கோபமா? சூர்யா பதில்!!!
4th of July 2013
சென்னை::சூர்யா, ஹரி கூட்டணியில் உருவாகி, ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில இருக்கும் ‘சிங்கம் 2’ படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. சூர்யா நடித்த படங்களிலேயே மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் நாளை சென்னையிலுள்ள பல தியேட்டர்களில் ஸ்பெஷலாக காலை காட்சியாகவும் திரையிடப்பட உள்ளது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் வெளியாகும் இப்படம், ஹிந்தியில் வருகிற 12-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தை அமெரிக்காவில் ’அட்மஸ் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் 62 தியேட்டர்களில் வெளியிட இருக்கிறது. இதற்கு முன் அஜித் நடித்த ‘பில்லா 2’ படம் தான் அமெரிக்காவில் ஒரே நேரத்தில் அதிகமான தியேட்டர்களில் வெளியாகி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது...
சிங்கம் 2 படத்தில் ஹன்சிகா நடிப்பதால் அனுஷ்காவுக்கு கோபமா? சூர்யா பதில்!
சிங்கம் 2 படத்தில் ஹன்சிகா நடிப்பதால் அனுஷ்காவுக்கு கோபமா என்பதற்கு பதில் அளித்தார் சூர்யா. சூர்யா நடிக்கும் படம் சிங்கம் 2. அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி நடிக்கின்றனர். ஹரி இயக்கியுள்ளார். இது பற்றி சூர்யா கூறியதாவது: எல்லோரும் திருப்தி அடையும் வகையில் சிங்கம் 2 உருவாகி இருக்கிறது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தபோது அதில் ஹன்சிகா கலந்துகொண்டார். அனுஷ்காவால் பங்கேற்க முடியவில்லை. இப்படத்தில் ஹன்சிகா நடிப்பதால் அனுஷ்காவுக்கு கோபம் அதனால்தான் அவர் பங்கேற்கவில்லை என்று இணையதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. அதில் உண்மை இல்லை.
இப்படத்தில் இரண்டு பேருக்கும் சமமான அளவில் வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. அனுஷ்கா தெலுங்கில் நடிக்கும் படம் ஒன்றிற்காக குதிரை ஏற்ற பயிற்சி, வாள் சண்டை பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். இதனால் அவருக்கு முதுகு வலி ஏற்பட்டிருந்தது. இதனால்தான் அவரால் அன்றைக்கு வரமுடியவில்லை. சிங்கம் 2 நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தபோது அதில் பங்கேற்றார். டி.வி நேரடி நிகழ்ச்சியிலும் பங்கேற்று பேட்டி அளித்திருக்கிறார்.
Comments
Post a Comment