Wednesday,5th of June 2013
சென்னை::கோலிவுட் பியூட்டி ஹன்சிகா மோத்வானி, தமிழில் அறிமுகமான, "மாப்பிள்ளை படமும், அதற்கு அடுத்து வெளியான, "எங்கேயும் காதல் என்ற படமும், சரியாக போகவில்லை. ஆனாலும், கோலிவுட் ரசிகர்களின் டார்லிங் ஆகி விட்டார். ரசிகர்களுக்கு மட்டுமல்ல; தமிழ் திரைப்பட உலகின் இளம் ஹீரோக்களுக்கும், ஹன்சிகா தான், டார்லிங்காம். இளம் ஹீரோக்கள் பலரும், ஹன்சிகாவுக்கு காதல் தூது விட, அவரோ, அதை பொருட்படுத்தாமல், தனக்கு கிடைத்த, நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து கொள்வதிலேயே குறியாக இருக்கிறார். ஹன்சிகா அளித்துள்ள ஒரு பேட்டியில், "என்னை, பலர் காதலித்திருக்கலாம். ஆனால், நான் யாரையும் காதலிக்கவில்லை. இப்போதைய நிலையில், காதலிப்பதற்கெல்லாம், எனக்கு நேரம் இல்லை என, திட்டவட்டமாக கூறியுள்ளார். ஆனாலும், கோலிவுட் காதல் மன்னர்கள், ஹன்சிகாவை சுற்றியே, வலம் வந்து கொண்டிருக்கின்றனராம்.
Comments
Post a Comment