அபிஷேக் பச்சனுக்கு ஜோடியாகிறார் அசின்!!!

Thursday,6th of June 2013
சென்னை::இந்தியில் அபிஷேக் பச்சன் ஜோடியாக அசின் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
 
பாலிவுட்டில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்த்தவர் அசின். இவர் நடித்த, கஜினி, போல்பச்சன், ஹவுஸ்புல் 2 போன்ற படங்கள் 100 கோடி ரூபாய்க்கு மேல், வசூலை குவித்தவை. ஆனாலும், அவருக்கு வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவில்லை.
 
இந்நிலையில்  'ஓ மை காட்' இயக்குனர் உமேஷ் சுக்லா, இந்தியில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இதில் அபிஷேக் பச்சன் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க அசின் ஒப்பந்தமாகியுள்ளார்.
 
எந்த மொழியிலும் பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த அசினுக்கு இப்போது புது பட வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியை தந்திருக்கிறது.

Comments