தமிழில் நடிக்க வாய்ப்பு வரவில்லை: பூஜா காந்தி!!!

Monday,3rd of June 2013
சென்னை::தமிழில் நடிக்க யாருமே வாய்ப்பு கொடுக்காததால்தான் கன்னடப் படங்களில் நடித்து வருகிறேன்” என்று நடிகை பூஜாகாந்தி தெரிவித்துள்ளார்.
 
கன்னடம் மற்றும் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘தண்டுபால்யா’ என்ற படம் தமிழில் ‘கரிமேடு’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இது கர்நாடகாவில் ஒரு குடும்பமே சேர்ந்து பல்வேறு கொலை கொள்ளைகளில் ஈடுபட்டு சிறை சென்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம் என்பதால் இந்தப்படத்தில் மேலாடை இல்லாமல் நடித்து பரபரப்பை ஏற்டுத்தியிருந்தார் பூஜாகாந்தி.
 
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் தமிழில் நடிக்கும் படம் என்பதால் அந்தப்படத்தின் பப்ளிசிட்டிக்காக சென்னை வந்திருந்தார்.
அப்போது பேசிய அவர்,‘தண்டுபால்யா’ எனக்கு நல்ல பெயரையும், புகழையும் கொடுத்திருக்கிறது. ஆனால் இந்தப்படம் ரிலீஸாகும் முன்பு எகப்பட்ட பிரச்சனைகளையும், எதிர்ப்புகளையும் சந்தித்தது. படத்தில் காட்சிகள் எப்படி இருக்கின்றன? என்று தெரியாமலேயே எதிர்ப்பை காட்டுவது சரியல்ல. “
 
தமிழில் ஏன் நீங்கள் நடிப்பதில்லை?” என்று கேட்டபோது, அப்படியில்லை, நல்ல பட வாய்ப்புகள் வரும்போது நான் தமிழ்ப் படங்களில் நடிக்க தயாராகத்தான் இருக்கிறேன், ஆனால் திருவண்ணாமலை படத்திற்குப் பிறகு எனக்கு எந்த பட வாய்ப்புகளும் தமிழில் அமையவில்லை, அதனால் தான் நான் தற்போது கன்னடப்படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறேன் என்றார்.

Comments