Monday,11th of June 2013
சென்னை::இந்திய அளவில் பரவலான நடிகையாகி விட்டவர் காஜல் அகர்வால். இதனால் மொழிவாரியாக நிறைய பாய் ப்ரண்ட்சுகளும் அவருக்கு இருக்கிறார்களாம். அவர் மும்பையில் முகாமிட்டிருந்தால் அங்கு கூடி கும்மாளமிடுவது. அதேபோல், ஆந்திரா, சென்னை என்று எங்கு காஜல்அகர்வால், இருந்தாலும் அவரை ஒரு நட்பு வட்டாரம் மொய்த்துக் கொள்கிறதாம். இதனால் அவர் தங்கும் ஸ்டார் ஹோட்டல்களின் அறைகள் எப்போதுமே ஜேஜே என்றிருக்குமாம்.
ஆனால், சமீபகாலமாக, காஜல் ரொம்ப பிசியாகி விட்டதால், ஹோட்டல் அறைகளை அவர் ஓய்வெடுக்க மட்டுமே பயன்படுத்துகிறார். இதனால், அவரை சந்திப்பதற்காக படப்பிடிப்பு நடைபெறும் இடங்களுக்கே விசிட் அடிக்கிறார்களாம் பாய் ப்ரண்ட்ஸ். அவர்கள் வந்து விட்டால், தனது கேரவனுக்குள் அழைத்து சென்று அரட்டையடிக்கிறாராம் காஜல். பின்னர் அவர் கேமரா முன்பு வந்து விட்டாலும் அருகில் நின்று கொண்டு அலம்பல் செய்கிறார்களாம் நண்பர்கள்.
இது தொடர்ச்சியாக நடப்பதால், காஜலை இயக்கி வரும் பட இயக்குனர்கள் டென்சன் ஆகிறார்களாம். என்றாலும் அம்மணி எதையும் பொருட்படுத்துவதில்லையாம். அதேசமயம் முக்கிய ஹீரோக்களுடன் தான் நடிக்கிற நாட்களில் நண்பர்களை ஸ்பாட்டுக்கு வரவிடுவதில்லையாம் காஜல். அவர்கள் தன் மீது கடுப்பாகி விடக்கூடாது என்பதால் அன்றைய தினங்கள் ரொம்ப நல்லவராக நடந்து கொள்கிறாராம்.
Comments
Post a Comment