30th of June 2013
சென்னை::கடவுள் கைவிட்டார். மீண்டும் நடிப்பு ஆசை வந்திருக்கிறது சுந்தர் சி.க்கு.
ஒழுங்காக படம் இயக்கிக் கொண்டிருந்த சுந்தர் சி.யை அவரது மனைவி குஷ்பு உசுப்பிவிட்டு ஹீரோவாக்கினார்.
முதல் படம் தலைநகரம் தவிர்த்து மற்ற எல்லாம் ஆவரேஜுக்கும் கீழே. கடவுளே இந்த கஷ்டத்திலிருந்து விடுதலை கொடு என்ற தமிழக மக்களின் பிரார்த்தனைக்கு பலன் கிடைத்தது.
தாறுமாறான தோல்விகளுக்குப் பிறகு, படம் நடிப்பதில்லை என ஒரு நல்ல நாளில் முடிவெடுத்து கலகலப்பு, மத கஜ ராஜா, தீயா வேலை செய்யணும் குமாரு என இயக்கத்தின் பக்கம் திரும்பி படங்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தார். ரசிகர்களும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
இந்நிலையில் அரண்மனை என்றொரு ஸ்கிரிப்டை யோசித்து வைத்திருக்கிறாராம். இதில் நானே நடித்தால் என்ன என்று அவருக்கு தோன்றியிருப்பதுதான் காலத்தின் கோலம். ஹீரோயினை தேர்வு செய்யும் பொறுப்பை குஷ்பு ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், நயன்தாரா, அனுஷ்கா, சமந்தா என்று பெயர்களை குலுக்கிப் போட்டு தேர்வு செய்வதாகவும் பிரேக்கிங் நியூஸ் வந்து கொண்டிருக்கின்றன.
Comments
Post a Comment