துருவ நட்சத்திரம்’ சூர்யா ஜோடி யார்?!!!

12th of June 2013
சென்னை::கௌதம் மேனன் – சூர்யா கூட்டணியில் உருவாகவுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் சூர்யா ஜோடியாக நடிப்பது யார் என்பது இன்னும் அறிவிக்கப்படாமலே உள்ளது.
 
இப்போதெல்லாம் படத்துக்குப் படம் ஹீரோவுக்கு புதிய ஜோடியயை நடிக்க வைப்பதைத்தான் இயக்குனர்களும், ஹீரோக்களும் விரும்புகிறார்கள்.
 
கடந்த சில படங்களில் நயன்தாரா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன், காஜல் அகர்வால், இப்போது ஹன்சிகா என அனைத்து முன்னணி நடிகையருடன் ஜோடி சேர்ந்து விட்டார். அதனால் இப்போது , சூர்யா  ஜோடியாக யார் நடிப்பார் என்பது தெரியாமலே இருக்கிறது.
 
படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்க உள்ள நிலையில், சூர்யா  ஜோடியாக நடிக்கப் போவது த்ரிஷா என்றும், அமலா பால் என்றும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
 
கௌதம் மேனன் இயக்கம், சூர்யா ஹீரோ என்பதால் பல நடிகைகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள போட்டி போடுகிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பொதுவாக, கௌதம் மேனன் இயக்கத்தில் ஹீரோயின்களுக்கும் எப்போதும் முக்கியத்துவம் இருக்கும்.
எந்த நட்சத்திரத்திற்கு ‘துருவ நட்சத்திரம்’ அதிர்ஷ்டம் காத்திருக்கிறதோ ?

Comments