ஹைய்யோ... இந்த கூத்தைப் பாருங்க!!!!

28th of June 2013
சென்னை::காமெடி புயல் நடிக்கும் ச‌ரித்திர படத்தின் பூஜை ஸ்டில்களை இரண்டு நாட்கள் முன்பு வெளியிட்டார்கள். புயலும், இயக்கமும் அப்படியொரு அந்நியோன்யத்துடன் காட்சி தந்தனர்.
 
படம் தொடங்கி
ஒரு மாசமாகிறது, இரண்டு கேமராமேன்கள் மாறிவிட்டார்கள், இயக்குனர் புயலின் கொடுமை தாங்காமல் ரயிலேறிவிட்டார்... அப்படியிருக்க இரண்டு நாட்கள் முன்பு படத்தின் பூஜையா, எதுவோ இடிக்குதே? விசா‌ரித்ததில் கிடைத்தது ஒரு அக்மார்க் அணுகுணி ஆட்டம்.
 
படம் பாதியில் பெயர்ந்து போனதை பூசி மெழுகுவதற்காக போன மாதம் 20ஆம் தேதி நடந்த பூஜை படங்களை இரண்டு நாட்கள் முன்பு வெளியிட்டிருக்கிறார்கள். இந்த ‌ஜிகினா வேலையை விட்டு, புயலுக்கு புத்தி சொல்லி படப்பிடிப்பை தொடங்குற வழியை பார்க்கலாமே.

Comments